அஜித்துடன் பேச ஷாலினிக்கு திருட்டுத்தனமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் செல் போன் கொடுத்து உதவியுள்ள 90ஸ் நடிகர்.

0
4336
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

-விளம்பரம்-

கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.மேலும்,1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த படத்தின் போது அஜித் அவர்கள் ஷாலினி இடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார்.

- Advertisement -

அதற்கு ஷாலினி என்னுடைய பெற்றோர்களிடம் பேசுங்கள் என்று சொன்னார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தான் நாம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் மலையாளத்தில் பிரபல நடிகரான குஞ்சாகோ பூபன், ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் பேச ஷாலினிக்கு செல்போன் கொடுத்து உதவியுள்ளாராம். நடிகர் குஞ்சாகோ பூபன்,ஷாலினியுடன் நிறம் படத்தில் நடித்து வந்த போது ஷாலினி அடிக்கடி யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருப்பாராம் பின்னர் அதனை அஜித் என்று கண்டுபிடித்துள்ளார் நடிகர் மேலும் 99 கட்டத்தில் செல்போன் அனைவரிடமும் இருக்காது என்பதால் நடிகர் குஞ்சாக்கோ தனது பழைய எரிக்சன் போன் ஒன்றை கொடுத்து ஷாலினியை அஜித்துடன் பேச உதவி செய்தாராம்.

നായികാകഥാപാത്രമായ സോനയെ ഒരു പുതുമുഖത്തെ കൊണ്ട് ചെയ്യിക്കാനാണ് ആദ്യം ആലോചിച്ചിരുന്നത്. സ്ക്രീൻ ടെസ്റ്റ് നടത്തി അതിനായി…

Kunchacko Boban Fans Online ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಆಗಸ್ಟ್ 9, 2020

அப்போது அஜித் அந்த செல்போனுக்கு கால் செய்தால் உடனே குஞ்சாக்கோ சோனா ஏகே 47 காலிங் என்று சொல்வாராம். நிறம் படத்தில் நடிகை ஷாலினியின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது ஒருநாள் இயக்குனருக்கும் இது தெரியவந்துள்ளது. பின்னர் ஒருநாள் இயக்குனர் கமல், ஷாலினியிடம் என்னாச்சு ஏகே 47 இன்று கால் செய்யவில்லையா என்று கேட்டதும், ஷாலினிக்கு ரே ஆச்சரியமாக போய்விட்டதாம். இந்த சுவாரசியமான தகவலை குஞ்சாக்கோவின் சமூகவலைதள ரசிகர் மன்றத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்

-விளம்பரம்-
Advertisement