விஜயகாந்த் திருமணத்திற்கு முன்பு 11 படங்கள் தொடர்ந்து ஃப்ளாப்: ‘நண்பேன்டா’ ராவுத்தர் நடத்திய சாகசம்

0
199
- Advertisement -

திருமணத்திற்கு முன் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் செய்த செயல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 11 தோல்வி படங்களை கொடுத்த விஜயகாந்துக்கு திருமணத்தின் போது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வெண்டும் என்று அவரின் நண்பரும் பிரபல தயாரிப்பளருமான இப்ராஹிம் ராவுத்தர் செய்த செயல் குறித்து பிரபல தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த் கடந்த 1979-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் முன்னணி இயக்குனர்கள் மட்டுமல்லாமல் பல புதுமுக இயக்குனர்களுக்கும் அதிகம் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த், திரைத்துறையில் கேப்டன் என்ற அடைமொழியுடன் வளம் வருகிறார்.

- Advertisement -

சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள விஜயகாந்த் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உருவெடுத்து சாதனை படைத்திருந்தார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருடன் ஒன்றாக பணியாற்றிய பலரும் அவர் குறித்து சுவாரஸ்யமாக தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமணத்திற்கு முன்பு விஜயகாந்த் 11 தோல்வி படங்களை கொடுத்ததாகவும், அவர் திருமணத்திற்கு முன் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் செய்த செயல் குறித்தும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 தோல்வி படங்களை கொடுத்தார்.

-விளம்பரம்-

அந்த நேரத்தில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த பிராசஸ் ஒருவழியாக முடிந்து திருமணமும் ஃபிக்ஸ் ஆனது. ஆனால் 11 தோல்விப்படங்கள் அமைந்ததால் திருமணத்திற்கு முன்பு ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் முடிவு செய்தார். அப்போது உருவானது தான் புலன் விசாரணை.

ஆர்,கே.செல்வமணி இயக்குனராக அறிமுகமான இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து படத்தை பார்த்த இப்ராஹிம் ராவுத்தருக்கு படம் நன்றாக இருந்தது. ஆனாலும் இன்றைய ட்ரெண்டுக்கு கொஞ்சம் படத்தை மெருகேற்ற வேண்டும். இந்த காட்சி எல்லாம் திரும்பவும் ஷூட் செய்யுங்கள் சில காட்சிகளை சேருங்கள் என்று படத்தில் பல திருத்தங்களை சொன்னார். ரீ-ஷூட்க்காக பல லட்சங்களை செலவும் செய்தார்.

இதற்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தரப்பும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்பிறகு தான் புலன் விசாரணை படத்தின் க்ளைமேக்ஸுல் விஜயகாந்த் – சரத்குமார் சண்டை காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டது. ஜனவரி 30-ல் விஜயகாந்த் திருமணம். பொங்கல் தினத்தில் வெளியான புலன் விசாரணை படம் பிளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது என்று கூறியுள்ளார்.

1988-ம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து அதன்பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 11 படங்கள் தோல்விப்படங்களாக அமைந்த நிலையில், 1990-ல் வெளியான புலன் விசாரணை படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement