எதற்காக மீண்டும் ஜூலி பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் ?

0
4116

60 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஜூலி வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் அவரை மக்கள் விரும்பாததே. இந்த நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Julieவிஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ள முன்னோட்ட வீடியோவில் ஜூலி பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், மேலும் இரு நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சொல்லப்போகிறார்கள் என்று நடிகர் திரு கமல்ஹாசன் கூறி இருந்தார்.

- Advertisement -

julieஇந்த நிலையில் நடிகர் பரணியும், நடிகை ஆர்த்தியும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று இணையத்தில் செய்திகள் வெளிவந்தன. அனால் உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அந்த இரண்டு நபர்கள் ஆர்த்தியும், ஜூலியும் தான் என்பது இன்று வெளியால வீடியோவில் தெரிகிறது. மக்களால் வெறுக்கப்பட்டு, மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்ட ஜூலியும் ஆர்த்தியும் மீண்டும் உள்ளே நுழைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

julieஓவிய எப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாரோ அன்றில் இருந்தே அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வந்தார்கள். இந்த நிலையில் எலியும் பூனையுமாக உள்ள ஆர்த்தியும் ஜூலியும் உள்ளே சென்றால் நிச்சயம் அங்கு மீண்டும் சண்டை நடக்கும் டிஆர்பி எகிறும் என்பதே மிக முக்கிய காரணாமாக இருக்க முடியும்.

-விளம்பரம்-

ஜூலி, ஆர்த்தி ஆகிய இருவரும் ஓர் இரு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டால் ஏற்புடுடையது. அனால் அப்படி இல்லாமல் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் மீண்டும் தொடர்வார்கள் என்றால் நிச்சயம் அதை மக்களை முட்டாளாக்கும் செயல் என்று தான் கூற வேண்டும்.

Advertisement