கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை கேப்ரில்லா என்ற பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். வெறும் லைக்ஸ் வாங்குவதற்காக இப்படி ஒரு கேவலமான செயலை செய்த்துள்ள இந்த பெண்ணை பலரும் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வந்தனர்.
கேப்ரில்லாவை பலரும் டிக் டாக்கில் கழுவி ஊற்றி வர தற்போது அவர் மீண்டும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிரபலத்திற்காக நான் அந்த விடியோவை பண்ணவில்லை. நான் அழுகின்ற காட்சியை மட்டும் மீம் கிரியேட்டர்கள் போட்டுள்ளனர். அந்த விடியோவைவின் இறுதியில் நான் என்ன கடைசியில் என்ன பேசியுள்ளேன் என்பதை ஏன் பார்க்கவில்லை என்று பேசியுள்ளார்.