விஷாலுக்கு 16 வயது பெண்ணுடன் தொடர்பு.! பித்தலாட்டம் ஆடிய பெண் கைது.! இவர் தான் அது.!

0
1194
Vishal
- Advertisement -

கடந்த சில மாதத்திற்கு முன்னர் சென்னை கோபால புறத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வரும் விஷ்வதர்ஷினி என்ற பெண் ஒருவர் நடிகர் விஷால் தனது வீட்டில் அருகில் இருக்கும் ஒரு பெண்ணை சந்திக்க இரவு நேரத்தில் வருவார் என்றும்,அவர் நடு இரவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வீடேரி குதிப்பார், பின்னர் 2 மூன்று மணி நேரம் கழித்து தான் வெளியே வருவார் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Image result for Vishal Vishva Dharshini

மேலும், நடிகர் விஷால் அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளதாகவும் விரைவில் அந்த ஆதாரத்தை வெளியிடுவேன் என்றும் விஷ்வதர்ஷினி வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் விஷ்வதர்ஷினி வீட்டில் அருகில் வசித்து வருவதாக கூறப்பட்ட பெண்ணின் வீட்டில் ஒரு 16 வயது பெண் தான் இருக்கிறார் என்று தெரியவந்தது.

இதையும் பாருங்க : காதல் மன்னன் படத்தில் ஷாலு நடித்துள்ளாராம்.! எந்த காட்சியில் தெரியுமா.! 

- Advertisement -

இந்நிலையில் அந்த பெண் மற்றும் அவரது தாயார் பொய்யான பாலியல் குற்றச்சாட்டை விஷ்வதர்ஷினி வைத்துள்ளார் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் விஷ்வதர்ஷினி மீது குழந்தைகள் மற்றும் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் விஷ்வதர்ஷினி கைது செய்யபடலாம் என்றுஎதிர்பார்க்கபட்டது.

அந்த பெண்ணின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசாருக்கு மாற்றப்பட்டது. விஸ்வதர்ஷினி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் விஸ்வதர்ஷினி தலைமறைவாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஸ்வ தர்ஷினி திருச்சங்கோட்டில் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை சைபர் கிரைம் போலிசார் அங்கு சென்று கைது செய்து வந்தனர். இந்த வழக்கில் தற்போது அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. தற்போது விஸ்வதர்ஷினி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement