மாமன்னன் படத்தில் வடிவேலு ரோலில் நான் தான் நடிக்க வேண்டியது – பிரபல காமெடியன் சொன்ன சுவாரசிய தகவல்.

0
138
- Advertisement -

மாமன்னன் படத்தில் வடிவேலின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்பட்டது. இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

மேலும், எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன். இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் வடிவேலு நடிப்பை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வியந்து போய் பாராட்டி இருந்தார்கள். காமெடியனாக அறியப்பட்ட வடிவேலு இந்த படத்தில் எமோஷனல் காட்சிகளில் அற்புதமாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

வடிவேலு ரோலில் நடிக்க இருந்த நடிகர்:

சொல்லப்போனால், இதுவரை காணாத வடிவேலுவை இந்த படத்தில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலின் ரோலில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல நடிகர் சார்லி. இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. ஆனால், அது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சார்லி, பொதுவாகவே ஒரு படத்தில் நடித்த பிறகுதான் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று நடிப்பை குறித்து பாராட்டுவார்கள். ஆனால், நான் மாமன்னன் படத்தில் நடிக்காமலேயே நிறைய பேர் என்னை பாராட்டி இருந்தார்கள்.

சார்லி பேட்டி:

பல பேர் அந்த கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அவர்களுடைய அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இது மட்டுமில்லாமல் நிறைய படங்கள் நான் நடிப்பதாக இருந்து அதற்கு பிறகு வேறு ஒரு நடிகர்களுக்கு சென்று இருக்கிறது. அதேபோல மற்ற நடிகர்களின் ரோல் எனக்கு வந்திருக்கிறது. எனக்கு கிடைத்த ரோலில் மட்டும் நான் ஒழுங்காக நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement