சென்னை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் – ஓ, இது இவங்க ஸ்கூல் தான. YG மகேந்திரன் என்ன சொல்லி இருக்கார் பாருங்க.

0
169397
yg
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

இது தொடர்பான புகைப்படங்களையும் மாணவிகள் பகிர்ந்துள்ளனர். அதே போல மனைவி ஒருவருக்கும் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதோடு மாணவிகளின் போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார்.23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன் – கவுண்டமணி வேதனை.

- Advertisement -

இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார்,  ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு,  அவரது மனைவியும்,  பிரபல கல்வியாளருமான   ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார் || YG Mahendran Mother Passed away
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி மற்றும் மகள் மதுவந்தி

அதில், PSBBயின் ன் ஆசிரியர் தனது வகுப்பைச் சேர்ந்த பெண் மாணவர்களுடன் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய ட்வீட் மற்றும் செய்திகளுடன் சமூக ஊடககளில் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். உண்மையில் ஒரு புகழ்பெற்ற மீடியா இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் குற்றச்சாட்டுகளின் ஸ்கிரீன் ஷாட்களை எனக்கு அனுப்பி விளக்கங்களைக் கேட்கிறது. ஒரு பொறுப்பான Trustee என்ற முறையில் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். இதுபோன்ற ஒரு காரியத்தை ஏன் நம்மில் யாரும் மதிப்பிடவில்லை, குறிப்பாக பெற்றோர்கள் டீன் மற்றும் மேனேஜ்மென்ட்டிடம் முறையிட்டதாகவும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறும்போது.

-விளம்பரம்-

பள்ளியில் அன்றாட நிகழ்வுகள் குறிப்பிட்ட பள்ளி கிளையின் டீன் மற்றும் அதிகாரிகளின் பார்வைக்கு வருகின்றனர். இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி இந்த விஷயத்தின் உண்மையை ஆராய வேண்டியது உங்கள் கடமையாகும்.ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து பெற்றோருக்கும் மாணவருக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். என் தாய் எம்.ஆர்.எஸ். யின் நர் பெயர் பெயர் இதன் மூலம் கெட்டுவிட கூடாது.

திருமதி ஒய்.ஜி.பி உருவாக்கிய பி.எஸ்.பி.பியின் பெரிய மரபுகளைத் தக்கவைத்துக்கொள்வதில் அனைத்தையும் நேர்மையுடனும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்பட்டால் ஒரு குழுவை நிறுவித்து கூட விசாரனை செய்யுங்கள். பள்ளி துவங்கியதிலிருந்து இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை . இந்த பிரச்சனை விரைவில் அழிக்கப்பட உங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement