வரவேற்க வந்த ரசிகரை அவமதித்த நடிகை. வீடீயோவை கண்டு நழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
2516
yami
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை யாமி கௌதம். வட இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் இவர் 2012 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆக்சன் ஜாக்சன், பாதியபூர், சனம் ரே, மற்றும் காபில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “கௌரவம்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் தான் தமிழில் நடித்தார். இவர் நடிகர் ஜெயின் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

பாலிவுட் நடிகையான யாமி கௌதம் அவர்கள் என்.டி டிவி, கலர்ஸ் போன்ற இந்தி சேனல்களில் ஒளிப்பரப்பான பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் நிறைய விளம்பரங்கில் கூட நடித்து உள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் ஆயுஷ்மான் குரானா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை யாமி அவர்கள் விமான நிலையத்தில் ரசிகரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகை யாமி அவர்கள் அசாமில் நடந்த மாரத்தான் போட்டிக்கு சென்று உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இவ்வளவு இறங்கியும் கூட எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை,காரணம் இதான் – ரகுல் சிங் பேட்டி

அப்போது ஏர்போர்ட்டில் இவரை வெல்கம் செய்ய ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அதில் ரசிகர் ஒருவர் அசாமின் பெருமைக்குரிய மாலையை அணிய முயன்று உள்ளார். இதை நடிகை யாமி அவர்கள் வேண்டாம் என்று அவரை தன் கையால் தள்ளி விட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று பல விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதற்கு நடிகை யாமி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, நான் என்னுடைய தற்காப்புக்காக தான் செய்தேன். ஒரு பெண்ணாக அந்த தருணத்தில் சங்கடமாக உணர்ந்தேன். என்னிடம் நெருக்கமாக ஒருத்தர் வரும்போது சங்கடமாக இருந்தது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இது தான் செய்வார்கள். நான் எந்த ஒரு தவறான நோக்கத்தில் இதை செய்யவில்லை. ஆனால், இதற்கு நீங்கள் இந்த மாதிரி எல்லாம் கூறுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் எந்த ஒரு நோக்கத்திலோ , நீங்கள் நினைக்கிற மாதிரி எண்ணத்திலோ நான் செய்யவில்லை. நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தவில்லை என்று கூறினார்.இருப்பினும் இவரது செயலை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement