யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘எனை மாற்றும் காதலே’ படத்தின் ட்ரைலர் இதோ..!

0
310
bigg-Yashika

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது ‘ஆயிரம் கால் மண்டபம்’ என்ற படத்தில் நடித்து வரும் யாஷிகா, மீண்டும் ஒரு புதிய பதில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை யாஷிகா ,விஜய் தங்கய்யன் என்பவர் இயக்கம் ‘எனை மாற்றும் காதலே ‘ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யாஷிகாவிற்கு ஜோடியாக தீபக் பரமேஷ் என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது.

படத்திற்கு ஜெர்ரி ஜொனாத்தன் என்பவர் இசையமைத்துள்ளார்,அரவிந்த் சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக சூர்யாவும் எடிட்டராக தமிழ் குமரனும் பணியாற்றியுள்ளனர். எஸ். மகேஸ்வரி என்பவரின் சில்வர் பாக்ஸ் ஸ்டூடியோ படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரும் வெளியாகியுள்ளது.