அண்ணன் அப்சட்டில் இருக்காரு- திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்து யோகி பாபுவின் சகாக்கள்.

0
2969
Yogi-Babu
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-40.jpg

- Advertisement -

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் யோகி பாபுவின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் `பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் “வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குக் கூடப் போக முடியாதபடி நடிச்சிட்டிருக்கீங்களாமே, கல்யாணம் வந்தா தாலி கட்டவாவது போவீங்களா?” என விஜய் கூட இவரைக் கலாய்த்திருந்தார். இந்த நிலையில், யோகிபாபுவுக்கு நிஜமாகவே கடந்த பிப்ரவரி 5, 2020 திருமணம்நடந்தது .

செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு என்கிற கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் மிக எளிமையாக இத்திருமணம் நடந்தது. மணப்பெண் பெயர் மஞ்சு பார்கவி. யோகியின் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். பார்கவி கண் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு சிகிச்சைக்குச் சென்ற யோகி பாபுவின் அம்மா அவரைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே தற்போது யோகிபாபுவின் மனைவியாகிவிட்டார் பார்கவி.

-விளம்பரம்-
Image

யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடைபெற இருந்தது. சமீபத்தில் நடிகர் யோகி பாபு தே மு தி க தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி ஆகியோரை சந்தித்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பத்திரிகையை கொடுத்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தற்போது யோகி பாபு திருமணம் வரவெற்பு நிகழ்ச்சி எப்படி நடத்துவது என்று வருத்தத்தில் இருக்கிறாராம் யோகி பாபு

Image

இதுகுறித்து யோகி பாபுவின் நண்பர் பாடகர் வேல்முருகன் கூறியுள்ளதாவது, முதல்வர் ஆபீஸ்லயே `இந்த டைம்ல வச்சிருக்கீங்களே’னு ஒரு வார்த்தை கேட்டாங்க. இன்விட்டேஷன் முன்கூட்டியே அடிச்சது குறித்துச் சொன்னோம். இப்ப நாடு முழுக்க ஊரடங்குன்னு ஆன பிறகு என்ன சொல்றது? யோகியே இது சம்பந்தமா சீக்கிரம் பேசுவார்னு நினைக்கிறேன்” என்றார் வேல்முருகன். மேலும், “அண்ணன் கொஞ்சம் அப்செட்ல இருக்கார்’’ என்று கூறியுள்ளனர் அவரது நெருங்கிய சகாக்கள் சிலர்.

Advertisement