இயக்குனர் அமீர் இயக்கிய அமீர் நடித்த ‘யோகி’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமாகி, இன்று தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது இவர் தான் தமிழில் முன்னணி காமெடியன்.
முன்னணி நடிகர்கள் படத்தில் காமடியனாக நடித்து வரும் யோகி பாபு தற்போது ‘தர்மபிரபு, ‘கூர்கா’ மற்றும் ‘ஜோம்பி’ ஆகிய படங்களில் யோகிபாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகிபாபு தான் நடிக்கும் காட்சிகளுக்கு தானே வசனம் எழுதவும் ஆரம்பித்துள்ளார்.
இதையும் படியுங்க : யோகி பாபு கூட அப்படி நடிக்க முடியாது..! பயங்கரமா சிரிச்ச விஜய்..மானத்த வாங்குறானு சொன்ன அம்மா
இதன் மூலம் தற்போது தான் நடித்து வரும் ‘தர்மபிரபு’ திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கு அவரே வசனம் எழுதுகிறாராம். இதனால் அவரது ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
முத்துகுமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகி வரும் ‘தர்மபிரபு’ படத்தில் யோகிபாபுவுடன் ராதாரவி, கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.