கன்னட சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கிச்சா சுதீப். இவர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் கன்னட திரை துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி என சில படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

அதன் பின் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மேக்ஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மார்க். இந்த படத்தை இயக்குனர் விஜய் கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மார்க் படம்:
இந்த படம் இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்கள். அப்போது பேசிய கிச்சா சுதீப், யோகி பாபு சாருக்கு ஒரு கால் இங்க இருக்கும். இன்னொரு கால் வேறு செட்டில் இருக்கும். எங்க படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப பிசியான நடிகர் என்றால் யோகி பாபு தான்.
https://www.youtube.com/watch?v=qubbHkQkdFA
யோகிபாபு பேட்டி:
அவர் இன்ஸ்டால்மெண்டில் தான் படப்பிடிப்பு தளத்துக்கு வருவாரு. நீங்க ஒரு வண்டி வாங்கினால் அதற்கான பணத்தை தான் நீங்கள் இன்ஸ்டால்மெண்டில் தானே கட்டணும். ஆனால், யோகி பாபு சாரும் இன்ஸ்டால்மெண்ட் முறையில் தான் படப்பிடிப்பு தளத்துக்கு வருவார். நாங்கள் சூட்டிங் முடித்துவிட்டு கிளம்பினதுக்கு பிறகு தான் யோகி பாபு சார் வந்திருக்கிறார் என்று கூப்பிட நடிக்க கூப்பிடுவார்கள். நான் காத்திருந்தாலும் அதற்கான விஷயங்கள் அவரிடம் இருக்கு என்று கூறியிருந்தார். பின் செய்தியாளர் ஒருவர் யோகி பாபுவிடம் நீங்கள் படத்தின் ப்ரமோஷனுக்கு சரியாக வருவதில்லை என்று சொல்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=vlfVyOxabpY
சர்ச்சைகளுக்கு பதிலடி:
அதற்கு யோகி பாபு, அந்த படக்குழுவின் இயக்குனரை கூட்டிட்டு வாருங்கள். நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன். இந்த மார்க் படத்தில் என்ன விஷயங்கள் செய்திருக்கிறோம் என்பதை பற்றி இங்கு நாம பேசுவோம். சத்திய ஜோதி நிறுவனத்திடம் நான் ஆரம்பத்தில் இருந்து வாய்ப்புகள் கேட்டிருக்கிறேன். அவங்க குடும்பத்தில் ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது.. வளர்ச்சியடைந்தால் சில பிரச்சனைகள் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பிரச்சனைகள் என்னுடைய லைப்பில் வரும்போது நான் கொஞ்சம் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.






