யோகி பாபு மற்றும் யாஷிகா நடித்துள்ள ‘ஜாம்பி’ படத்தின் டீஸர் இதோ.!

0
963
Zombie-Teaser
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியான விளங்கி வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் தற்போது கூர்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  தற்போது இவர் நடித்துள்ள ‘ஜாம்பி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

த்ரில்லர் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் புவன் இயக்குகிறார். பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ள உள்ள நிலையில் படத்தின்டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.  

இதையும் பாருங்க : சிக்ஸ் பேக்கை காட்ட படு மோசமான செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட கோ பட நடிகை.! 

- Advertisement -

இந்த படத்தில் யோகி பாபு லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்தும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது இந்த படம் காமெடி திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், யோகி பாபு, யாஷிகாவை தவிர இந்த படத்தில் யூடுயூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் என்று பலர் நடித்துள்ளனர். எனவே, இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் இதோ.

Advertisement