-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘நான் என்ன நல்லது பண்ணி இருக்கேன்னு தெரியல’ – குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இர்பான் போட்ட பதிவு

0
460

‘குக் வித் கோமாளி’ பிரபலம் இர்ஃபானுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் ஆன இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்ஃபான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஹோட்டல்களில் சாப்பிட்டு அதற்கான ரிவியூவுகளை பகிர்ந்து கொள்வார். அதோடு இவர் எப்போதும் அரை ட்ரவுசர் போட்டுக் கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காஸ்ட்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

இர்ஃபான் குறித்து:

மேலும், இவர் கடந்த ஆண்டு மே மாதம் ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இந்த திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான யூடியூப்பர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் இர்ஃபான் கலந்துகொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்:

-விளம்பரம்-

இதனிடையே இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் இர்பான் துபாய் சென்றிருந்தார். அங்கு கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியின் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டார். இதனை வைத்து ஜெண்டர் ரிவில் வீடியோவை இர்ஃபான் வெளியிட்டு இருந்தார். இதற்கு இவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

-விளம்பரம்-

இர்ஃபான் மனைவியின் வளைகாப்பு:

அதோடு சிலர், மருத்துவ கவுன்சில் இர்ஃபான் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலர் கூறிய நிலையில், இதற்கான நோட்டீஸும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவத்திற்கு இர்ஃபான் மன்னிப்பு கேட்டிருந்தார். பின் அவர் பதிவிட்டிருந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இதை அடுத்து சில வாரங்களுக்கு முன் இர்ஃபான் தன்னுடைய மனைவிக்கு மிகப்பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்து இருந்தார்.

இர்பான் பதிவு:

இந்நிலையில் இர்ஃபான் அப்பாவாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக இவர் தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, என்ன நல்லது பண்ணிருக்கேன் என்று தெரியவில்லை. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு. கடவுளுக்கு நன்றி. என்னுடைய தேவதை வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news