நேர்கொண்ட பார்வை பாடல் குறித்து ட்வீட் செய்த யுவன்.! ரசிகர்கள் மகிழ்ச்சி.!

0
948
Nerkonda-paarvai

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தற்போதும் யூடுயூப்பில் பட்டையைகிளப்பி வருகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் அவரை காண முடியவில்லை.

இதையும் பாருங்க : 18 வயதில் அந்த மாதிரி படத்தை பார்த்துள்ளாராம் பிரியா பவானி சங்கர்.! அதற்கு காரணம் இவர் தானாம்.! 

- Advertisement -

இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாகவே இந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Image result for yuvan shankar raja ajith

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே அஜித்தின் தீனா, பில்லா, மங்காத்தா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களில் வரும் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசை இன்றளவும் அவ்வளவு மாஸான ஒரு பி ஜி எம்மாக இருந்து வருகிறது. இதே வரிசையில் இந்த படத்தின் பி ஜி எம்மும் இருக்கும் என்று இந்த படத்தின் டீசரைலேயே தெரியவந்தது.

Advertisement