ஜீ குடும்ப விருதுகள் : 46 லட்சம் வாக்குகளை பெற்று விஜய் சேதுபதி கையால் விருது பெற்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை.

0
1181
vjs
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் என்றால் அது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஷபானாவிற்கு இந்த ஆண்டிற்கான அபிமானமான நடிகை என்ற விருதை பெற்றுள்ளார்.

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஜீ குடும்ப விருதுகள் விழாவில் இந்த விருதை ஷபானா பெற்றுள்ளார். வருடா வருடம் நடக்கும் இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷாபனாவிற்கு இந்த ஆண்டிற்கான அபிமானமான நடிகை என்ற விருது வழங்கப்படுள்ளது. ஷாபனாவிற்கு இந்த விருதை நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ளார். மேலும், இந்த விருத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நடிகை ஷபானாவிற்கு 46 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார்.

https://www.instagram.com/p/CGl3jeApGHB/?igshid=1k0lzt37l14fo

கடந்த மூன்று வருடங்களாக இந்த விருதை பெற்று வருகிறார் ஷபானா. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் தழுவல். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement