ஜீ தமிழ் சீரியல் வில்லிக்கு வெள்ளித்திரையில் அடித்த ஹீரோயினி ஜாக்பாட்- 9 வருட போராட்டத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

0
127
actress
- Advertisement -

ஜீ தமிழ் சீரியல் நடிகை வெள்ளித்திரையில் ஹீரோயினியாக களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் தொடர்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

சோசியல் மீடியாவில் ஸ்வேதா ஸ்ரிம்டன்:

மேலும், இவர் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்ட்டிவ். அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு இவருடைய புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் லைக்குகளை குவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்வேதா ஸ்ரிம்டனுக்கு ஃபேஷன் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஸ்வேதா ஸ்ரிம்டன் குறித்த தகவல்:

மாடலிங் ஷோக்களில் பங்கு பெற்றதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். மேலும், இவரது நீண்ட நாள் கனவே வெள்ளித்திரையில் நடிகை ஆவது தான். இதற்காக இவர் பல வருடங்களாக கடுமையாக முயற்சி செய்து போராடி வருகிறார். அதோடு இவர் பல படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் அமலாபாலின் ஆடை மற்றும் நயம் படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஸ்வேதா ஸ்ரிம்டன் நடிக்கும் படம்:

இந்த நிலையில் தற்போது ஸ்வேதா ஸ்ரிம்டன் ஹீரோயினியாகி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா இயக்கும் படத்தில் தான் நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ராஜா கிளி என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தகவலை ஸ்வேதாவே சோஷியல் மீடியாவில் உறுதி செய்திருக்கிறார்.

ஸ்வேதா ஸ்ரிம்டன் பதிவு:

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா பதிவிட்டு இருப்பது, ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்து உள்ளேன். உங்களுடைய ஆதரவை தாருங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், இப்படத்தின் பூஜை படங்களையும் அதில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இவரின் பதிவு சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஸ்வேதாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Advertisement