நடிகை மட்டும் என்ன ஒசத்தியா ? சென்னை ஏர்போர்டில் திரிஷா நடந்த விஷயம். விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.

0
641
trisha
- Advertisement -

சர்வதேச விமான நிலையங்கள் என்ற வரிசையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் நாம் சென்னை விமான நிலையமும் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் முக்கியமான ஒரு விமான நிலையம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை விட சென்னையில் இருக்கும் விமான நிலையத்துக்கு பாதுகாப்புகள் அதிகப்படியான இருக்கும்.அதற்கு காரணம், தமிழ்நாட்டிற்கு யாரும் வந்தாலும் குறிப்பாக தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலமானவர்கள் விளையாட்டு வீரர்கள் என முக்கிய இடங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு தனி பாதுகாப்புடன் வரவேற்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சென்னை விமான நிலையம் மூலமாகத்தான் தமிழ்நாட்டிற்குள் வர முடியும். அந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம்.

-விளம்பரம்-

சென்னை விமான நிலையம் மூலமாக இந்தியாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகின்றார்கள் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்களும் வெளிநாடு செல்கின்றனர் விமான நிலையத்தில் உள்நாடுகளுக்குள் செல்லும் மாண பயணிகளும் வெளிநாட்டுக்கு செல்லும் மாண பயணிகளும் செல்லும் விமான சேவை இங்கு செயல்படுவதால் சென்னை விமான நிலையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் செயல்படுகிறது. இதில் முதல் அடுக்கு பாதுகாப்பு விமான நிலையத்திற்கு முன் வாளகத்திற்குள் வருவதற்கு முன் முதல் அடுக்கு பாதுகாப்பும். சென்னை விமான நிலையத்திற்குள் வந்தவுடன் வரவேற்பு இருக்கும் இடத்தில் இரண்டாவது பாதுகாப்பும். விமானம் ஏறுவதற்கு முன்பாக செக்கிங் செய்யும் இடத்தில் மூன்றாவது பாதுகாப்போம் அமைந்துள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : மீண்டும் ஹாலிவுட் படத்தில் இடம்பெற உள்ள தனுஷ் – அவரே பகிர்ந்த செம தகவல். உற்சாகத்தில் ‘D’ ரசிகர்கள் – விவரம் இதோ.

முககவசங்களை கழட்டி அடையாள அட்டை காண்பிக்க வேன்டும் :-

சென்னை விமான நிலையத்தை தொழிற்படை பாதுகாப்பு குழுவினரும் தமிழக காவல்துறை பாதுகாப்பினரும் இணைந்து பாதுகாக்கின்றனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பினால் மாநிலங்களின் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களில், ரயில்வே நிலையங்களில், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் முகம் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வருபவர்களை பாதுகாப்பு படையினர் அவர்களின் முகத்தை கவசங்களை கழட்ட சொல்லியும் அடையாள அட்டையை காண்பித்த பிறகும் ஒப்பிட்டு பார்த்து தான் அனுமதிப்பார்கள். அந்த அளவுக்கு விமான நிலையத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

-விளம்பரம்-

திரிஷாக்கு மட்டும் தனி கவனிப்பு :-

இந்நிலையில் வெளிநாட்டுக்கு அல்லது இந்தியாவுக்குள்ளேயே உள்நாட்டுக்குள் பயணிக்கிருந்த திரிஷா சென்னை விமான நிலையம் வந்தார். சாதாரண மக்களை பல மணி நேரம் சோதனைக்கு உட்படுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கும் பாதுகாப்பு படையினர் திரிஷாவை மட்டும் முகக் கவசம் எதையும் கழட்ட சொல்லாமல் அடையாள அட்டையை சோதனை செய்யாமல் நேரடியாக பாதுகாப்பு படை குழுவினர் உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சில சமூக ஆர்வலர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியீட்டுள்ளனர் சில மணி நேரங்களிலேயே வைரலான இந்த வீடியோ பற்றி சிலர் கருத்து தெரிவித்த வண்ணமே இருக்கிறார்கள். அதில் சிலர் திரிஷாவுக்கு சாதகமாகவும் சிலர் திரிஷாவை எதிர்த்தும் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை திரிஷா.

பொன்னியின் செல்வன் :-

கொடி திரைப்படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இவர் நடித்த மோகினி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகை திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இந்த திரைப்படமும் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னரே தான் 96 திரைப்படம் இவருக்கு மீண்டும் ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கொந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்னியின் செலவன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தை எதிர்பார்த்த வண்ணமே ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement