விஜய்க்கு கோரிக்கை வைத்த பார்வையற்ற ரசிகர். நிறைவேற்றுவாரா விஜய்? வைரலாகும் வீடியோ.

0
1549
Vijay-fan-video
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவும் பாவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் பட்டாளம் எண்ணிலடங்காதவை. சமீபத்தில் தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த “பிகில்” படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பார்வையற்ற நபர் ஒருவர் விஜய் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, விஜய் அண்ணா உங்களை சந்திக்க நான் 20 வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், எல்லாம் தோல்வியில் தான் முடிந்து வருகிறது. நீங்கள் நூறு வருஷம் இல்ல ஆயிரம் வருஷத்துக்கு மேல் நன்றாக இருக்க வேண்டும். உங்களை நான் இறப்பதற்குள் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும். அதோடு நீங்கள் உயிரோடு இருக்கும் போதே நாங்கள் இறந்து விட வேண்டும். ஏன்னா, நீங்கள் இல்லாத உலகத்தில் எங்களால் வாழ முடியாது என்று கூறினார். அவர் கூறிய வார்த்தை பலரையும் கண் கலங்க வைத்து விட்டது.

இதையும் பாருங்க : காரை மறைத்து நடிகை ரோஜாவை தாக்க முயற்சி ? இணையத்தில் வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கண் கலங்கினர். அதோடு இந்த அளவிற்கு விஜய் மீது தீவிர ரசிகரா! என்று பாராட்டி வருகிறார்கள். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படமான “மாஸ்டர்” படம் குறித்து பல தகவல்கள் நாளுக்கு நாள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த மாஸ்டர் படம் கோடை விடுமுறை அன்று திரையரங்கிற்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement