சீனாவில் சாதனை படைக்கபோகும் 2..0..!ஹாலிவுட் படங்களுக்கு கூட கிடைக்காத அங்கீகாரம்.!

0
158
2.0rajini

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய திரையுலகின் அடுத்த கட்டம் என்று போற்றப்படும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்துள்ளது.

2.0 china

சுமார் 545 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் நான்கு நாட்களில் 400 கோடி வசூலை செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

ஆனால், ரஜினி ரசிகர்கள் அதிகமாக ஜப்பான் நாட்டில் இன்னும் ‘2.0’ படம் வெளியாகவில்லை.ஒரு சில சென்சார் பிரச்சனைகளால் இன்னும் சீனாவில் ‘2.0’ படம் வெளியாகாமல் இருந்த நிலையில் அடுத்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் இந்த திரைப்படம் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.

அதிலும் சீனாவில் மொத்தம் 10000 திரையரங்குகளில் 56000 திரைகளில் இந்த படத்தை திரையிட உள்ளனர் அதில் 47,000 திரைகளில் 3D-யிலும் வெளியாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு திரைப்படமும் இத்தனை திரையரங்கில் 3D-யில் வெளியானதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.