2.0 படத்தின் அசத்தல் காட்சி வெளியானது.! இணையத்தில் வைரலாகும் பிரமாண்ட வீடியோ

0
391
2.o

இயக்குனர் ஷங்கரின் “ஐ” படத்திற்கு பிறகு பிரமாண்ட பொருட்ச் செலவிவில் உருவாகி வரும் படம் “2.0” எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எந்திரன் படத்தின் முதல் பாகத்தை விட மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ‘2.0’ படம் 3D தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து சிறப்பான கலைஞர் வரவழைக்கப்பட்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் உருவான காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடிகை எமி ஜாக்சனின் பாடல் காட்சி ஒன்று படமாக்கபட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் வழக்கமான ஷங்கரின் படம் போலவே பிரமாண்ட செட், வித்யாசமான ஆடை போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளது. எந்திரன் படத்தில் வந்த ‘இரும்பிலே’ என்ற பாடலை போன்று இந்த பாடலும் உருவாக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.