விஜய்-அட்லீ 63 படம் இந்த ரஜினி ஹிட் படத்தின் காப்பியா..? கசியும் தகவல்.!

0
318
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

vijay and atlee

ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான “தெறி” மற்றும் “மெர்சல் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அட்லீ- விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. ஏ ஜி எஸ் நிறுவனம் தரிக்கவிருக்கும் இந்த படத்தில் “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி ” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கியரா அட்வானி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி இயக்குனர் அட்லீ சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் ‘படத்தின் கதை பயங்கரமா வந்திட்டிருக்கு.இத படத்தை வேற தரத்திற்கு கொண்டு போகணும்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பயங்கரமா, மாசான ஒரு அறிவிப்பு வரும். இந்த முறை நான் பயப்படுவே மாட்டேன். தற்போது தைரியம் தைரியம் கூடியுள்ளது. அதனால் இந்த படத்துல இதுவரை பண்ணாத ஒரு விசயத்தை பண்ணனும்னு நினைக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

annamalai

இந்நிலையில் இயக்குனர் அட்லீ, சூப்பர் ஸ்டார் நடித்த மெகா ஹிட்டான ‘அண்ணாமலை’ படத்தை தழுவிய ஒரு கதையை தான் சற்று மாற்றம் செய்து எடுக்க போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்னவே அட்லீ பழைய தமிழ் படங்களின் கதைகளை சுட்டு படமெடுக்கிறார் என்று அவர் மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இயக்குனர் அட்லீ,விஜய்யை வைத்து எடுத்த ‘மெர்சல்’ படம் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கதை போன்று இருந்ததாக ஒரு சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் அட்லீயின் அடுத்த படமும் வேற எதாவது படத்தின் கதையை தூசி தட்டி கொடுத்தால் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.