விபத்தில் சிக்க இருந்த ரசிகரை காப்பாற்றிய அஜித் ? இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ.

0
406
Ajith
- Advertisement -

பைக் ரிப்பேர் ஆகி உதவி கேட்ட நபருக்கு மெக்கானிக்காக அஜித் மாறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. , சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது. கடந்த ஆண்டு தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீப காலமாகவே அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளத்தில் பைக்கில் சுற்றிய வீடியோக்கால் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் அஜித்ததை ரோட் ட்ரிப்பில் கண்ட ரசிகர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து செல்கிறார். அப்போது சாலையின் எதிர் திசையில் லாரி ஒன்று வருகிறது. அந்த ரசிகர் அஜித்தை பின்தொடரும் ஆர்வத்தில் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் வேகத்தை குறைக்காமல் சென்று கொண்டு இருக்கிறார். இதனை கவனித்த அஜித், தனது கைகளை நீட்டி சைகை காட்டி அந்த நபரை விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வர அஜித்தின் இந்த மனிதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நடிகர் அஜித்  உலகச் சுற்றுப் பயணத்தில் இறங்கியுள்ளார். அந்தப் பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தன் கேமராக்களால் பதிவுசெய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலக சுற்று பய்ணமானது அஜித்தின் வாழ்க்கையிலேயே அவர் நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனையாக இருக்கப் போவதால், அதை பதிவு செய்யவுள்ளாராம் அஜித். 

லும், முதல் கட்ட சுற்றுப் பயணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது. இந்த மொத்த சுற்றுப் பயணமும் முடிந்ததும், அந்தப் பதிவை ஒரு ஆவணப் படமாகவும் அஜித்குமார் வெளியிட வாய்ப்புள்ளது. நீரவ் ஷா, அஜித்தின் ‘துணிவு’, ‘வலிமை’ ‘பில்லா’,’நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement