23 வயது பெண்ணை மணக்கும் 52 வயது பிரபல நடிகர் ! புகைப்படம் உள்ளே !

0
3757
- Advertisement -

தற்போதைய காலத்தில் வயது வித்யாசம் பார்க்காமல் திருமணம் செய்வதோ அல்லது காதல் செய்வதோ மிக மிக சாதாரணமாக நடக்கிறது. அதிலும் திரைபிரபலங்கள் என்றால் வயது ஒரு பெரிய பொருட்டாகவே அவர்களுக்கு தெரிவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்குமே கிட்டத்தட்ட 35 வயது வித்யாசம் இருக்கிறது.

அப்படி பார்த்தால் சாதாரணமாக சினிமா உலகில் இருப்பவர்கள் பெரிய பொருட்டு இல்லை என்று தான் தோணுகிறது. பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். இவர் பாலிவுட்டின் பிரபலமான அனைத்து ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்தவர்.

- Advertisement -

இவருக்கு 52 வயதாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 26 வயதான வயதான Ankita Konwar’ஐ காதலிப்பதாக செய்திகள் வந்தது. மேலும், இருவரும் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாகவே தென்பட்டனர்.

பின்னர் 52 வயதான மிலிந்த் சோமனும் 23 வயதான அங்கிதா கோன்வாரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர். அங்கிதா கோன்வாரின் உண்மையான பெயர் சுஷ்மிதா. பல மாதங்களாக காதலித்து வந்த இருவரும், அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

Milind-Soman

மிலிந்த் சோமன் இருவரது திருமணம் குறித்து அங்கிதாவின் வீட்டில் அவரது பெற்றோர்களை சந்தித்து பேசியுள்ளார். அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement