குண்டாக இருந்த 90ஸ் ரசிகர்களின் கனவுக் கன்னி மந்த்ரா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.

0
4393
manthra

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாக நடித்து உள்ளார். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். மந்தாராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் மந்த்ராவின் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி மந்த்ரா-வா இது என்று ஷாக் ஆகி உள்ளனர். பொதுவாகவே 90 காலகட்டத்தில் நடித்த நடிகைகள் பல பேர் தற்போது சினிமா உலகில் காணாமல் போய்விடுகிறார்கள்.

இதையும் பாருங்க : ‘மிஷன் இம்பாசிபிள்’ மாதிரி ஒரு படம். ‘நீங்க எப்போ சொன்னாலும் பண்ணிடலாம் சார்னு விஜய் சொன்னார், அதுக்குள்ள அவர் இறந்துட்டார். யார் தெரியுமா ?

- Advertisement -

ஒரு சிலர் மட்டும் தான் தற்போது படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். அதில் நடிகை மந்த்ரா அவர்கள் படங்களில் வாய்ப்பு குறிந்த உடன் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி வந்தார். கடைசியாக இவர் வாலு படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் மந்த்ரா கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதில் அவர் அழகு குறிப்புகள், எடை குறைப்பு குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் படபிடிப்பு தள வீடியோக்கள் என பலவற்றையும் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆரம்பத்தில் இவர் படு குண்டாக இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது இவர் உடல் எடையை குறைத்து சற்று ஒல்லியாக மாறிய புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து மந்த்ராவா!!! இது என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement