டிக்கிலோனா படத்தின் மாறனின் Deleted வீடியோ – இந்த காமெடிய போய் தூக்கி இருக்காங்களே.

0
27075
maaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நுழைந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் வேற லெவல். காமெடியனாக திரையுலகில் கால் பதித்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் டிக்கிலோனா படத்தில் நடித்தார் . இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, ஸ்ரீரின், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : ஜெராக்ஸ், லப்பர், மிச்சர், ரகுமான் – சென்னை ஸ்லாங்கை கேலி செய்து வீடியோ – வெளுத்து வாங்கிய இயக்குனர்.

- Advertisement -

மேலும், இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த படத்தில் காமடிக்கு எத்தனயோ பேர் இருந்தாலும் இந்த படத்தில் நடித்துள்ள மாறனின் காட்சிகள் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. அதிலும் இவர் பேசிய ‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கள’என்ற ஒற்றை வசனம் படு வைரலானது.

This image has an empty alt attribute; its file name is 1-113.jpg

இவர் வரும் காட்சிகள் மட்டுமே படத்தில் நகைச்சுவையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், படத்தில் இவரது காட்சிகள் அதிகம் வைத்து இருந்தால் படத்தில் காமெடி இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் டிக்கிலோனா படத்தின் மாறனின் டெலீட்டட் காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கினார்கள் என்று புலம்பி வருகின்றனர். நடிகர் மாறனை லொள்ளு சபா இயக்குனர் தான் அதிக படங்களில் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இவருக்கு பெரும்பாலான படங்களின் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதானாலேயே இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இனியாவது இவரை பல இயக்குனர்கள் சரியாக பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement