பத்தே நாளில் 1.2M பார்வையாளகர்கள்.! இணையத்தில் கலக்கும் லாஸ்லியாவின் வீடியோ.!

0
4362
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருவது லாஸ்லியா தான். ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். 

-விளம்பரம்-

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ஒருபுறம் பல ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

லாஸ்லியா, இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான் இவர் இலங்கையில் உள்ள சக்தி என்ற தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சி க்கு முன்னர் இவர் செய்தி வாசித்து வீடியோக்கள் அவ்வளவாக பார்க்கப்படவில்லை

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பத்தே நாட்களில் யூடுயூபில் இவர் செய்தி வாசிக்கும் வீடியோ ஒன்று தற்போது 1.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்த வீடியோ வெளியான இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக 370 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement