ஜெயிலர் கதை விக்ரம் மாதிரியே இருக்கே – அப்போதே நெல்சனிடமே கூறியுள்ள லோகஷ். நெல்சனின் பதில்.

0
1687
- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் விக்ரம் திரைப்படத்தின் கதையா? விளக்கம் அளித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த படம் லோகேஷ் கனராஜ் இயக்க போவதாக அதிகார்பபூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது.

விக்ரம் – ஜெயிலர்:

இந்த இரண்டு திரைப்படங்களும் தன்னுடைய காவல் துறையில் நேர்மையாக இருந்து உயிரிழந்தது போல கதை இருக்கும். தன்னுடைய மகனை கொன்றவர்களை பழிவாங்கும் வகையில் கமலும் ரஜினியும் செல்வது போல கதை நகர்ந்து இருக்கும். இரண்டு கதை களமும் ஒரே மாதிரி போல் இருக்கும் இருப்பினும் ஜெயிலர் திரைபடத்தில் இறுதியில் தன்னுடைய மகன் தாந வில்லன் போல இருக்கும். ஜெயிலர் திரைப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்தின் காப்பியாக இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

-விளம்பரம்-

பேட்டியளித்த நெல்சன்

ஜெயிலர் திரைப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தடம் பதித்த திரைப்படமாக இருந்து வருகிறது. ஜெயிலர்திரைப்படத்தின் கதையானது விக்ரம் பட திரைப்படத்தின் கதையை போல உள்ளது என்ற பலர் விமர்சித்து வந்தனர் இதற்கு பதில் அளித்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார். அந்தப் பேட்டியில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கூறுகையில் நான் நான் ஆரம்பத்திலேயே ஜெயிலர் கதையை லோகேஷ் கனகராஜ் இடம் கூறினேன். அவர் என்னிடம் நீ விக்ரம் படம் பார்த்தால் பார்த்து விட்டாயா என்று கேட்டார்.

இரண்டு திரைப்படங்களும் ஆரம்பிப்பது ஒரே இடத்தில் இருந்தாலும் அதன் பின் செல்வது வெவ்வேறு கதைக்களமாகவே செல்கிறது. கதையை மாற்ற வேண்டும் என்று எதையாவது குழப்பம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. இரண்டு திரைப்படங்களும் ஆரம்பித்தது ஒரே இடத்தில் இருந்தால் இருந்தாலும் அதன் பின் காதை நகர்வது வெப்பரிடங்களாக இருந்தது ஆகையால் நான் திரைக்கதையில் மாற்றம் செய்து குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. என்று நெல்சன் திலீப்குமார் கூறியிருந்தார்.

Advertisement