அதை பார்த்த பின்னர் சோகமாக வந்து, இனி இங்கே ஷூட்டிங் வேண்டாம்னு சொல்லிட்டார். அஜித் குறித்து நடிகர் அம்பானி சங்கர்.

0
1250
ambani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் அம்பானி சங்கர். தற்போது நடிகர் அம்பானி சங்கர் என்ன செய்கிறார்? அவர் மனைவி யார் ? என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்… “கடுகு சிறித்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் அம்பானி சங்கர் தன் வாழ்க்கையில் முன்னேறியவர். நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் சினிமா உலகில் உயரம் ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளவர். தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் ,விடாமுயற்சியாலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

-விளம்பரம்-

நடிகர் கருணாஸ் மற்றும் அம்பானி சங்கர் இணைந்து நடித்த படம் “அம்பாசமுத்திரம் அம்பானி”. மேலும், இவர் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கினார். அந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் அம்பானி சங்கர் என்று அழைத்தார்கள். இதை தொடர்ந்து அம்பானி சங்கர் அவர்கள் சிம்புவின் வல்லவன், கருப்பசாமி குத்தகைகாரர், குசேலன் பட்டதாரி, கண்னே கலைமானே, பக்கா, குளேபாகுபாலி, விருந்தாளி, பட்டது யானை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

மேலும், அம்பானி சங்கர் தன்னுடைய தனித் துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். நடிகர் அஜித்தின் ‘ஜீ’ படத்தின் மூலம் தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அம்பானி சங்கர், ஜீ படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அஜித் சார் முதன் முதலில் என்னை பார்த்தபோது நான் சின்ன பையன் என்று நினைத்து க்யூட் பாய்னு சொல்லி என்னை ‘க்யூட் பாய்’னு கொஞ்சினார். பின்னர் அங்கு இருந்தவர்கள் சார், அவனுக்கு 17 வயசு என்று சொன்னார்கள். அதன் பின்னர் அஜித் சார் என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்தார். பட ஷூட்டிங்கின் போது தான் கும்பகோணத்தில் தீ விபத்து நடந்தது அதைக் கேள்விப்பட்டு அஜித் சார் உடனே அந்த இடத்திற்கு சென்றுவிட்டார். அங்கே சென்று வந்ததும் மிகவும் சோகமாக இருந்தார். இனிமேல் இங்கே ஷூட்டிங் வேணாம் சார் என்று லிங்குசாமி சாரிடம் கூறிவிட்டார். அதன் பின்னர் கும்பகோணத்தில் ஷூட்டிங் செய்யவில்லை வேறு வேறு ஊர்களில் தான் சூட்டிங் செய்தோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement