தன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..!

0
528

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

Arjun

இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நிபுணன் படத்தின் போது நடிகர் அர்ஜுன் நெருக்கமான காட்சிகளை இயக்குனரிடம் வேண்டும் என்றே கேட்டு வாங்கினார் என்றும் அந்த காட்சியில் வேணுமென்றே பின் பாகத்தை தடவினார் என்றும் நடிகை ஸ்ருதி நாராயணன் குற்றம் சாட்டி இருந்தார்.

நடிகர் அர்ஜுனா இது போல செய்தார் என்று பலரும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் பிரபல கன்னட செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசிய நடிகர் அர்ஜுன், நான் சினிமாவில் எப்போதும் தவறாக நடந்து கொண்டதே இல்லை.

 

இதுபோன்ற கீழ் தரமான எண்ணம் எனக்கு வந்தது இல்லை இனி வர போவதும் இல்லை. உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கண்டிப்பாக இதுகுறித்து நான் வழக்கு தொடர்வேன். நான் metoo வை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் , யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்ட முடியுமா.

இது போன்ற ஆட்களின் செயலால் மீடூவிற்கு மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. அவர் என் மீது வைக்கும் குற்ற சாட்டிற்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா, இல்லை ஆதாரம் இருக்கிறதா. அவருக்கு என்னிடம் நடிக்க விருப்பம் இல்லை என்றால் அப்போதே அவர் சொல்லி இருக்க வேண்டியது தானே. என்மீது அவர் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது நான் கண்டிப்பாக வழக்கு தொடருவேன்.