கோவிலில் மாரிமுத்துவிற்கு சிலை வைத்த பா.ஜ.கவினர் – உடன் இருக்கும் சிலை யாருடையது தெரியுமா ?

0
544
- Advertisement -

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு பாஜகவினர் சிலை வைத்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்கு சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின் இவர் “கண்ணும் கண்ணும்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து இறப்பு:

இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். இவருக்கு டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது நெஞ்சு வலி வந்து மருத்துவமனைக்கு சென்று இருந்தார். ஆனால், சிகிச்சை போதே இவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலை வைத்த ரசிகர்கள்:

மேலும், இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இறப்பிற்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, இவருடைய குடும்பத்திற்கு மாரிமுத்து மறைவு பெரும் இழப்பு என்று சொல்லலாம். தமிழகம் முழுவதுமே மாரிமுத்துவின் ரசிகர்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் விழுப்புரத்தில் பாஜகவினர் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மோடி அம்மா மரணம்:

அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென். கடந்த ஆண்டு இறுதியில் தான் இவர் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் இருக்கும் போது 100 வயது ஆகியிருந்தது.

Advertisement