200 குடும்பங்களுக்கு உணவளிக்க உதவுங்கள். கொரானா நேரத்தில் கரம் கேட்ட வாணி ராணி சீரியல் நடிகர்.

0
1622
arunkumarrajan

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயை விட வேகமாக பரவி கொண்டே செல்கிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் நெருங்கி உள்ளனர், 68 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த நிலைமையை போக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : ‘ஜெய்ஹோ’ என்று குறிப்பிட்டு இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கிய ஜாக்கி சான்.

- Advertisement -

நிறைய பேர் பிரதமர் மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் அருண் ராஜன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவஸ்தை படும் மக்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து உள்ளார். இது குறித்து இவர் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு கூறியிருப்பது,
இதை நான் சுய பெருமைக்காக செய்யவில்லை.

பல்வேறு மக்கள் தினக்கூலியை நம்பியே இருப்பவர்கள். தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக உங்களை ஊக்குவிக்கவே என்னால் முடிந்த இந்த ஒரு சேவை செய்கிறேன். நான் 25 பேருக்கு பிரியாணி வாங்கி கொடுத்தும், 200 பேர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் வாங்கி கொடுத்தேன். இருப்பினும் இவை அனைத்தும் போதுமானதாக இருக்க போவது இல்லை. எனவே இதில் என்னுடன் கைகோர்த்து 200 குடும்பங்களுக்கு உதவி அளியுங்கள்.

இதையும் பாருங்க : சமந்தாவின் எ**யும், திரிஷாவின் தி**யும், என் முன்னால் ஒன்றுமே இல்லை – ஸ்ரீரெட்டியின் மோசமான இரட்டை அர்த்த பதிவு.

-விளம்பரம்-

அதற்கு ஒருவர் என்னவெல்லாம் கொடுக்கலாம் என்றால்..
அரிசி – 5 Kg
காய்ந்த மிளகாய – 250gms
கடுகு – 50gms
சமையல் எண்ணெய் – 1 Litre
ஊறுகாய் – 1 Bottle
பருப்பு- 1k
சீரகம் – 50gms
உப்பு – 1 Packet
சர்க்கரை – 1Kg

சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண் ராஜன். வாணி ராணி சீரியலில் நடிகர் அருண் ராஜன் அவர்கள் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் அழகி, சந்திரலேகா, ஈஸ்வரி, இளவரசி, கல்யாண பரிசு சந்திரலேகா என பல சீரியல்களில் நடித்து உள்ளார்.

Advertisement