கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெய் – அஞ்சலி நடித்து திரைக்கு வந்த படம் பலூன். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கி இருந்தார். சென்ற வருடம் இறுதியில் வெளி வந்திருக்க வேண்டிய படம் ஆனால் இரு வரடம் கழித்து வந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என முன்பே கூறபட்டது.
படம் வெளியான பின்பும் கூட, இயக்குனர் சினிஷ் தன் பேஸ்புக் பக்கத்தில் படம் குறித்து எழுதி இருந்தார்.
படம் ஹிட் ஆகிவிட்டது. ஆனால், பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த படத்தினால் தயாரிப்பாளர் நஷ்டத்தில் உள்ளார். இதற்கு காரணம் ஒரு நடிகர், அவரால் தான் இந்த படம் நஷ்டம் ஆனது எனவும் தன் பக்கத்தில் எழுதி இருந்தார்.
தற்போது அந்த பிரச்சனை பெரிதாகி உள்ளது, படத்தின் தயாரிப்பு நிறுவனம் 70mm Entertainment சார்பில் தயாரிப்பாளர்கள் கே.நந்தகுமார் மற்றும் அருண்பாலாஜி ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
படத்தின் நஷ்டத்திற்கு நடிகர் ஜெய் தான் காரணம் என பகிரங்கமாக கூறியுள்ளனர். படப்பிடிப்பபிற்கு ஜெய் சரியாக வரவில்லை. அப்படியே வந்தாலும் குடித்துவிட்டு போதையில் வருவது. இதனால் அவரை வைத்து 4 மணி நேரம் கூட சூட்டிங் எடுக்க முடியவில்லை, என அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் 20 நாள் சூட்டிங் எடுக்க ஏற்பாறு செய்து செட் எல்லாம் போட்டு ஒரு மாதம் காத்திருந்தோம். ஆனால், 30 நாள் ஆகியும் ஜெய் வரவில்லை. ஒரு வழியாக செட் எல்லாம் நாசமாக அழிந்து பின்பு மீண்டும் ரிப்பேர் செய்த பின்னர் வந்தார். ஆனால் திடீரென அஞ்சலிக்கு வலிப்பு வந்துவிட்டது. உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். நான் போக வேண்டும் என பொய் சொல்லிவிட்டு சூட்டிங் வராமல் ஓடிவிட்டார் ஜெய்.
ஒரு வழியாக கஷ்டப்பட்டு பல மாதங்கள் கழித்து சூட்டிங் முடிந்து டப்பிங் செய்ய அழைத்தால் அதற்கும் சரியாக வரவில்லை. இதனால் சென்ற வருடம் வெளியாகி இருக்க வேண்டிய படம், 2917 டிசம்பரில் வெளியானது. இதே காரணத்தால் தெலுங்கிலிம் சரியான தேதியில் வெளியாகவில்லை. இதனால் அங்கும் நான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.
இந்த பிரச்சனை தீரும் வரையில் ஒரு படத்திலும் அடிக்க நடிகர் ஜெய்க்கு தடை விதிக்கும்படி கேட்டு கொள்கிறோம். இதற்காக சாட்சிகள் பல பேர் இருக்கின்றனர். படத்தின் நஷ்டத்திற்கு ஒரு முடிவு வேண்டும் எனக் கூறி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதேபோல் தான் AAA படத்திற்கு சிம்பு செய்ததால் அவருக்கு அடுத்த படங்களில் நடிக்க முடியாதபடி ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது. தற்போது சிம்பு பார்ட்-2வாக நடிகர் ஜெய் வந்துள்ளார்.