சர்கார் சர்ச்சை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி…!கருணாகரனின் அசத்தல் பதில்..!

0
1294
KARUNAKARAN
- Advertisement -

சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

-விளம்பரம்-

karunakaran

- Advertisement -

விஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.

இதனால் ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக எந்த ஒரு பதிவியும் இருந்தார் .தற்போது சர்கார் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் சிலர் அரசு அளித்த இலவச மிக்சி, டிவி போன்றவைகளை உடைத்து அதனை வீடியோ பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகர் கருணாகரனிடம் ரசிகர் ஒருவர், ப்ரோ மிக்ஸி,லேப்டாப் ஏதும் ஒடைச்சிங்களா? என்று கேள்வி கேட்டிருந்தார், இதற்கு பதிலளித்த நடிகர் கருநகரன், இல்ல ப்ரோ, நான் ஒடச்சா புதுசா வாங்கணும் இல்ல என்று பதிவிட்டுள்ளார். விஜய் ரசிகர்களிடம் மீண்டும் வம்பு வைக்க கூடாது என்று ,,மிகவும் சாதுர்யமாக பதிலளித்து நடிகர் கருணாகரன் எஸ்கேப் ஆகியுள்ளார்.

Advertisement