மணிவண்ணன் இறந்த சில மாதத்தில் இறந்த அவரின் மனைவி – பலர் வேண்டாம் என்று தடுத்தும் பெற்றோர்கள் ஆசைப்பட்ட ஈழப் பெண்ணை திருமணம் செய்துள்ள மணிவண்ணன் மகன்.

0
2240
Raghuvannan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவர் நடிகர் மணிவண்ணன். மணிவண்ணன் அவர்கள் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றியுள்ளார். இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார்.மணிவண்ணன் நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்துள்ளார்.

-விளம்பரம்-

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ,ரகுவண்ணன் மகனும்,ஜோதி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து உள்ளார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்றார். நடிகர் மணிவண்ணன் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதுகு வலிப்பதாக கூறி இருந்தார்.

- Advertisement -

மணிவண்ணன் இறப்பை தாங்கிகொள்ளாத அவரின் மனைவி :

பின்னர் என்ன? நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். நடிகர் மணிவண்ணனின் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மேலும், இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்துள்ளார்.மேலும், மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.

நடிகர் ரகுவண்ணன் :

மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் கோரிப்பாளையம். முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்து இருந்தார். என்னதான் மணிவண்ணன் மகனாக இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை. இவருக்கு மணிவண்ணன் இறப்பதற்கு 3 மாதத்திற்கு முன் தான் நிச்சயதார்தம் முடிந்தது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஈழப் பெண்ணுடன் திருமணம் :

ரகுவண்ணனுக்கு 2016 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற முதல் குழந்தை பிறந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆதித்யன் என்ற இரண்டாம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது நடிகர் ரகுவண்ணன் அவர்கள் லண்டனில் இருக்கிறார். மணிவண்ணன் உயிரோடு இருந்த போது ஈழப் பிரச்சனைகாக குரல் கொடுத்து இருக்கிறார். மேலும், தன் மகனை ஒரு ஈழ பெண்ணுக்கு தான் கட்டி கொடுப்பேன் என்று கூறி இருந்தார்.

பெற்றோர் இறந்த பின் திருமணம் :

சொன்னதை போலவே தன் மகனுக்கு ஈழப் பெண்ணுடன் நிச்சம் முடித்து வைத்தார் மணிவண்ணன். ஆனால், திருமணம் நடைபெறும் முன்னர் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் காலமாகிவிட்டனர். தந்தை இறந்த சில மாதத்திலேயே தன் தந்தையின் ஆசைப்படி ஈழப் பெண்ணை மணிவண்ணன் குறித்த தேதியிலேயே திருமணம் செய்தார் மணிவண்ணன் மகன். எத்தனையோ பேர் வேண்டாம் என்று சொல்லியும் அப்பா குறித்த தேதியில் தன் திருமணம் நடக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படியே திருமணம் செய்து காட்டினார்.

Advertisement