தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான வில்லனாக கலக்கியவர். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லனாக தான் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பயப்படாதே ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு படங்களில் மன்சூர் அலிகான் மிரட்டியிருப்பார். இவர் சினிமா உலகில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
பின் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் இவருக்கு சினிமா உலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு தமிழ் சினிமா உலகில் வில்லனாக கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார். மேலும், இவர் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.
மன்சூர் அலிகானின் திரைப்பயணம்:
மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு உள்ளது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் 2500 வீடு அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும்,
மன்சூர் அலிகான் நடித்த படம்:
இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் காரணமாக அரசு நிலத்தை மீட்கும் பொறுப்பில் சில மாதங்களுக்கு முன் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி வழக்கு தொடர்ந்திருந்தார். பிறகு கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கடலை போட ஒரு பொண்ணு வேணும்.
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் படம்:
இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் அசார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் யோகி பாபு, நாஞ்சில் சம்பத் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மன்சூர் அலிகான் மகன் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மன்சூர் அலிகான் மகனின் பெயர் அலி கான் துக்ளக். தற்போது இவர் படங்களில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார்.
வைரலாகும் மன்சூர் அலிகான் மகனின் புகைப்படம்:
மேலும், மன்சூர் அலிகான் இயக்கும் படத்தில் அவரின் மகன் அலி கான் தான் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். இந்த படம் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும். இந்நிலையில் யாரும் பார்த்திடாத மன்சூர் அலிகான் மகனின் புகைப்படம் வெளியாகி உள்ளது. தற்போது இவர் தன்னுடைய போட்டோ ஷூட் மற்றும் குடும்பம் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த பலரும் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு பெரிய மகனா! அது மட்டுமில்லாமல் சினிமாவில் தன் தந்தை பிடித்த இடத்தை மன்சூர் அலிகான் மகன் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.