‘பூ’ நடிகையின் வதந்தியால் வாழ்க்கையை இழந்த நடிகர் மோகனின் தற்போதைய நிலை !

0
4962

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலின் ஆதிக்கம் செமத்தியாக இருந்த கால கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் சேர்த்து செம்ம காம்படீசன் கொடுத்தவர் மோகன். மைக் மோகன் என்று தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
mohan 80களில் இவரது திரைப்பயணம் கொடிகட்டிப் பறந்தது. 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தின் நடிப்பின் மூலம் அந்த வருடமே சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

அதன் பின்னர் சக்கை போடு போட்டு தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என அனைத்து மொழிகலும் நடித்தார். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய தனது நேரத்தை செலவிட்டார். கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து செம்மையாக வாழ்ந்தவர் இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா.
mohan இவருடன் பழகிய பிரபல நடிகை ஒருவர் மோகனை காதலித்துள்ளார். ஆனால், மோகன் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அந்த நடிகை , மோகனுக்கு. எயிட்ஸ் நோய் இருப்பதாக ஒரு பொய்யான தகவலை பரப்பினார் என்று அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

அன்றிலிருந்து மோகனை எந்த ஒரு நடிகையும் பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. மோகன் படம் என்றால் விலக துவங்கினர். இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளரும் இவரைக் கண்டு தெரித்து ஓடத் துவங்கினார்கள்.
mohanபக்கத்து வீட்டுக்காரர் கூட மோகனைக் கண்டு பயந்து வீட்டிற்குள் கூட விட மாட்டார் ஜன்னலை சாத்தி கொள்வார். இதனால் விக்ரக்தியின் உச்சத்திற்கு சென்ற மோகன் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டார். இன்னும் நன்றாகத்தான் ஆரோக்கியமாக உள்ளார் மைக் மோகன். தற்போது அவருக்கு 61 வயது ஆகிறது.