காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகனா இது.! விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறாரா..! போட்டோ இதோ

0
1596
Ms-Basker

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர்.

msbhaskars-son-aadhitya

- Advertisement -

இந்நிலையில் ஆதித்யா தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள “96” என்ற படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ளாராம். சமீபத்தில் ஆதித்யா மற்றும் விஜய் சேதுபதியை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆதில் ஆதித்யா பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜய் சேதுபதியை சிறு வயதில் பார்ப்பது போலவே இருக்கின்றார்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கி உள்ள இந்தபடத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். படத்திற்கு கோவிந்த் மேனன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க அவரை போன்றே தோற்றமுடைய ஒரு நபரை இந்த படத்தின் இயக்குனர் தேடி வந்தாராம்.
adithya

-விளம்பரம்-

அதன் பின்னர் நடிகர் எம் எஸ் பாஸ்கரன் மகன் ஆதித்யாவை பார்த்த இயக்குனர் பிரேம், பின்னர் அதித்யா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினாராம். தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவரா என்று படம் வெளியான பின்னரே தெரியும்.

Advertisement