பாண்டியராஜனுடன் போட்டோ எடுக்க இப்படியா பொய் சொல்றது ! நீங்களே பாருங்க

0
1330
Actor pandiyarajan

நடிகர் பாண்டியராஜன் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். நம் பலருக்கு தெரியாத ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் பாண்டியராஜன் ஒரு இயக்குனர். அவர் இயக்குனராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1985ஆம் ஆண்டு கண்ணீராசி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குணராக அறிமுகம் ஆன பாண்டியராஜன் அதன்பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.

pandiyarajan Actor

தயரிப்பாளராகவும் சில படங்களில் இருந்துள்ளார். இங்குதான் பிரச்சனை, இவர் தயாரிப்பாளராக ஆசைப்படுவதை தெரிந்த சில நபர்கள் பாண்டியராஜனை பயன்படுத்தி ஒரு சிறுபிள்ளை தனமான செயலை செய்துள்ளனர்.

படம் தயாரிக்க பணம் வாங்கி கொடுப்பதாக பாண்டியராஜனை அழைத்து சென்று ஒரு வீட்டில் வைய்த்துள்ளனர். அந்த வீட்டிற்கு பல நபர்களை வரவழைத்த அந்த நபர், அவர்களை பாண்டியராஜனுடன் போட்டோ எடுக்க வைத்துவிட்டு பணம் உங்களுக்கு வீடு தேடி வரும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் விசாரித்தால், போட்டோ எடுப்பதற்கென்றே விளையாட்டாக பொய் சொல்லி பாண்டியராஜனை அழைத்து சென்று போட்டோ எடுத்துள்ளனர். இந்த கலகலப்பான செய்தியை பாண்டியராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.