கலைஞர் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு? – பிரகாஷ் ராஜ் ஆவேசம்

0
1277
- Advertisement -

தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையை பிரகாஷ்ராஜ் வெளுத்து வாங்கி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அரசியலில் பிரகாஷ் ராஜ்:

மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் 9 ஆண்டு கால பாஜகவின் ஆட்சி குறித்து கூறி இருந்தது, நாம் எல்லோரும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி:

பாஜக என்ன செய்திருக்கிறார்கள்? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் முன்னர் சில வாக்குறுதிகளை அளித்தது. பின் ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை பாஜகவினர் அதை எப்போது நிறைவேற்றுகிறீர்கள்? இல்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று சொல்கிறார்கள். 15 லட்சம் ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொன்னீர்கள் அதைக் கேட்பதற்கு வக்கில்லை. காங்கிரஸ் இப்போது தான் வந்திருக்கிறது. அதற்குள் செய்து விடுவார்களா? வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதாவது இருக்கணும் வேண்டாமா? மல்யுத்த போராட்டத்தில் அண்ணாமலை கலைஞரை இழுத்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

அண்ணாமலை குறித்து சொன்னது:

அதேபோல் வைரமுத்து பெயரை இழுக்கிறார். கலைஞர் உள்ளவரை இந்த நாட்டின் குடிமக்கள் மதவாதத்தை பற்றி பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லாமல் தான் அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் இல்லை என்பதால் நாம் தற்போது பேச வேண்டி இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட் காரி துப்பிய பின்னர் முதல் பதிவு அறிக்கை போடப்பட்டிருக்கிறது. கலைஞரை இழுக்க உனக்கு தகுதி இருக்கு? கர்நாடகாவில் ஒரு முறை நான் மக்களோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அது இரவோடு இரவாக நின்றுவிட்டது. மக்களுடன் நான் தெருவில் நின்று பேசினேன்.

பாஜக ஆட்சி குறித்து சொன்னது:

அதற்கு என் மீது வழக்கு பதிவு கூட செய்திருந்தார்கள். இந்த வழக்கு தொடர்பாக நான் இரண்டு வருடம் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். அப்போதே நான் அவர் உள்ளே என்ன கலர் ஜட்டி போட்டு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். அவர் கலர் தெரிந்துவிட்டது. மல்யுத்த வீராங்கனைகள் அழுது கொண்டிருக்கும் புகைப்படங்களை மாற்றி சிரிப்பது போன்று உங்கள் கட்சிக்காரர்கள் மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதெல்லாம் அசிங்கமாக இல்லையா? விளையாட்டு வீரர்களோடு செல்பி எடுத்துக் கொள்ள தெரிகிறது. ஒரு பிரச்சனை என்றால் பேச மாட்டீர்களா? என்று ஆவேசத்தில் பாஜக கட்சியை வெளுத்து விலாசி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

Advertisement