சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மனைவிகளை நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.
இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.அதோடு விஜய் அரசியல் வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்திருந்தார்.
இதை விஜய் மக்கள் இயக்கத்தினரும் சிறப்பாக செய்து இருந்தார்கள். இந்நிலையில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
— Bussy Anand (@BussyAnand) June 7, 2023
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்… pic.twitter.com/OCc1eiX6UV
அதில் ‘”ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவளுக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது! “தளபதி விஜய்” அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று “அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள (R.K Convention Centre-ல்) 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பணிரெண்டாம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “தளபதி விஜய்” அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.