உங்களுக்கு விஜய் என்றால் எப்படி..!நடிகர் பிரசாந்த் அசத்தல் பதில்..!

0
1601
Prasanth

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார்.

Prasanth and vijay

- Advertisement -

குடும்ப பிரச்சனை காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த பிரசாந்த் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று போராடி வருகிறார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘ஜானி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், தனது திரையுலக பயணம் குறித்தும் மற்ற நடிகர்களுடனான உறவு குறித்தும் பேசி இருந்தார். அப்போது விஜய் பற்றி பேசியுள்ள நடிகர் பிரசாந்த், விஜயும் நானும் பல இடங்களில் சந்தித்துள்ளோம்.

-விளம்பரம்-

தொழில் ரீதியாக மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் நாங்கள் பல விடயங்களை பரிமாறிக்கொண்டுள்ளோம். அவருக்கு ஒண்ணுன்னா நான் போய் நிப்பேன் எனக்கு ஒன்னுனா அவர் வந்து நிப்பார். எல்லாத்துக்கும் மேல நாங்கள் நடிகர்கள் என்பதை தாண்டி ஒரு குடும்பம் தான் என்று கூறியுள்ளார் பிரசாந்த்.

Advertisement