கஜா புயலுக்காக செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி செய்த உதவி .! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

0
1450
senthil

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Posted by Rajalakshmi Army on Wednesday, November 21, 2018

அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த செந்தில் மற்றும் ராஜலட்சுமி நிவாரண பொருட்களை அளித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் செய்த உதவியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். காரணம் என்னவெனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல லட்சத்தை பரிசாக வென்ற இந்த தம்பதியினர் நிவாரண பொருட்கள் என்ற பெயரில் 3 ரூபாய் மதிப்புள்ள டைகர் பிஸ்கெட்களை நிவாரண பொருட்களாக அளித்துள்ளனர்.

அதனை வீடியோ எடுத்து ஒரு நபர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மக்கள் மூலம் பிரபலமடைந்த செந்தில் மற்றும் ராஜலட்சுமி லட்ச கணக்கில் சம்பாதித்திருந்தலும், இப்படி கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு 3 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கேட்டையா வழங்குவது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.