விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை! – ரமேஷ் கண்ணா பேட்டி

0
111
- Advertisement -

அஜித்தின் அரசியல் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து, இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா என பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் ஆண்பாவம், பூவேஉனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் துணை இயக்குனராகபணியாற்றி இருந்தார்.

- Advertisement -

ரமேஷ் கண்ணா பற்றிய தகவல்:

அதேபோல,, இவர் கேஎஸ் ரவிக்குமாரிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். இடையில் சில ஆண்டுகள் இவர் நடிக்கமால் இருந்தார். பின் இவர் நடிக்க தொடங்கி விட்டார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரமேஷ் கண்ணா, அஜித்திடம் ஒரு நாள் நான் பேசியது, அப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

அரசியல் பற்றி அஜித் சொன்னது:

நீங்க எப்போ வருவீங்க என்று எதார்த்தமாக கேட்டேன். அதற்கு அஜித், ஒரே வார்த்தையில் மூடிட்டு போ என்று சொன்னார். அந்த அளவுக்கு தான் அஜித்துக்கு அரசியலில் ஆர்வம் இருக்கு. அவரைப் பொறுத்தவரை அரசியல் என்றால் ஒரு குடிமகனாக தவறாமல் தன்னுடைய வாக்களிக்கும் கடமையை செய்ய வேண்டும் என்பது தான். மற்றப்படி அவர் அரசியலில் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது.

-விளம்பரம்-

அஜித் திருமணம் குறித்து சொன்னது:

மேலும், ஒரு முறை நான் அஜித்திடம், நடிகையை திருமணம் செய்யாதே. எல்லாரும் டைவர்ஸ் ஆகி போயிடுறாங்க. ஒரு நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள் என்று அஜித்திற்கு அட்வைஸ் செய்தேன் . ஆனால், அதன் பின்னர் தான் இயக்குனர் சரண் அஜித்-ஷாலினி காதலிப்பதை தெரிவித்தார். இதனை கேட்டதும் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. இருப்பினும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினேன் என்று பல விஷயங்களை ரமேஷ் கண்ணா பகிர்ந்து இருக்கிறார்.

விஜய்-அஜித் படங்கள்:

அஜித் உடன் அமர்க்களம், அட்டகாசம், ஆஞ்சநேயா, வில்லன், வரலாறு என்று வரிசையாக பல படங்களில் ரமேஷ் கண்ணா நடித்து இருக்கிறார். இறுதியாக அஜிததுடன் வீரம் படத்தில் ரமேஷ் நடித்திருந்தார். விஜயுடன் இவர் நடித்த ஒரே படம் பிரண்ட்ஸ். இருந்தாலும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து இருந்தது. விஜய் தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். கட்சியின் நிர்வாகிகளும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்

Advertisement