பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து பழி வாங்கிய ஷாரிக்..! அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா..!

0
595

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா மற்றும் மஹத்தின் காதல் விவாகரத்திற்கு பிறகு அதிகம் பேசப்பட்டது ஐஸ்வர்யா மற்றும் ஷாரரிக் ரொமான்ஸ் தான். பிக் பாஸ் வீட்டில் இளம் போட்டியாளர்களான ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகளின் ரொமான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே போனது.

Aishwarya

- Advertisement -

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் சென்று கொண்டு தான் இருக்கிறது. ஷாரிக் இருந்த போது பிக் பாஸ் வீட்டில் நடத்த ஒரு டாஸ்கின் போது ஷாரிக் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதனை ஐஸ்வர்யாவும் ஏற்று கொண்டது போல தான் தோன்றியது.

அனால், ஹிட்லர் டாஸ்கின் போது ஷாரிக்கிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் ஒரு சிறு மோதல் ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் இருவரும் கொஞ்சம் தள்ளியே இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் ஷாரிக்.

-விளம்பரம்-

ஷாரிக்கை கண்பஷன் அறையில் பார்த்ததும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டார் ஐஸ்வர்யா, பின்னர் இருவரை முடிச்சி போட்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலாய்க்க துவங்கினர். இருப்பினும் ஐஸ்வர்யா, எனக்கு யாஷிகா தான் முக்கியம் அவரை தவிற இந்த வீட்டில் நான் யாரும் எனக்கு முக்கியமில்லை என்று கூறியிருந்தார்.

Aish-bigg-boss

அதே போல ஐஸ்வர்யா முன்னை போன்று தன்னிடம் நெருக்கம் காட்டாமல் இருக்கிறார் என்று உணர்ந்த ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் தனியாக பேசுகையில் இந்த வீட்டில் அதிகம் பின்னாடி பேசியது நீ தான் என்று கூற நான் எதையும் மனசுல வெச்சிக்காம பேசிடுவேன் என்று ஐஸ்வர்யா குறிக்கிறார். அதற்கு ஷாரிக், வெளியிப்படையா பேசறது வேற பின்னாடி பேசறது வேற என்று கூறுகிறார்.

பின்னர் என்னை பற்றி நீயும் யாஷிகாவும் பின்னாடி நிறைய பேசி இருக்கீங்க. ஆனால், யாஷிகா என்ன விட்டு கொடுத்து இல்லை என்று ஷாரிக்,ஐஸ்வர்யாவிடம் கேட்க, அதற்கு ஐஸ்வர்யா, மும்தாஜ், மஹத், யாஷிகா, உன்னால் எல்லாம் நான் நிறைய காயப்பட்டுள்ளேன் என்று கூறுகிறார். இதற்கு ஷாரிக், நீ ஏன் என் பின்னாடி பேசின, நான் உன்னபத்தி ஒரு வார்த்தை கூட பேசல நீ பல தடவ என்ன பத்தி பேசி இருக்க என்றதும், ஆமா நான் பேசின என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

big-boss-aish

இதனால் சற்று கோபமடைந்த ஷாரிக், ஐஸ்வர்யா பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரை உதாசினபடுத்தும் வகையில் அங்கிருந்து நகர, இதுமாதிரி போகாதா ஷாரிக் என்று ஐஸ்வர்யா கையை நீட்டி பேசி, ஷாரிக் போகாதா நில்லு என்று கூறுகிறார். ஐஸ்வர்யா அழைப்பதை பொருட்படுத்தாத ஷாரிக், ஐஸ்வர்யாவை திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிடுகிறார். இறுதியில் ஐஸ்வர்யா,இந்த பேச்சை முடித்துவிட்டு போ ஷாரிக் என்று சொன்னதும் எனக்கு உன்னைவிட அதிக strees இருக்கு எழுந்து வா என்று கூறிக்கொண்டே பாத்ரூமில் சென்று விடுகிறார்.பின்னர் முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு அங்கேயே தனியாக அமர்ந்து கொண்டு விடுகிறார் ஐஸ்வர்யா.

Advertisement