நடிகர் சத்யராஜ் மகள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
4364
sathyaraj-Actor

சத்யராஜ் கோயமுத்தூரை சேர்ந்தவர். இவருக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் திவ்யா.

sathyaraj

- Advertisement -

தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.

சமீபத்தில் ஒரு சர்வதேச நிறுவனம் திவ்யாவை அணுகி குறைபாடு உள்ள ஒரு மருந்தினை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும், மக்களுக்கும் பரிந்துரைக்க சொல்லி கேட்டுள்ளது. மேலும், அப்படி பரிந்துரைக்க பல கோடி ரூபாய் பணம் தறுவதாக கூறியுள்ளது அந்த சர்வதேச நிறுவனம். ஆனால், மக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த மருந்துகளளையும் நான் மக்களுக்கு கொடுக்க மாட்டேன் எனக்கூறி தடாலடியாக மறுத்துவிட்டார். மேலும், இது குறித்து ஒரு பத்திரிகையிலும் பேட்டி கொடுத்து அந்த கார்ப்பரேட் சதியை முறியடித்தார் திவ்யா.

-விளம்பரம்-

divya

இதற்கு எல்லாம் காரணம் என்னுடைய அப்பா சத்யராஜ் தான் என பலமுறை கூறி இருக்கிறார். பாரிசில் நடந்த ஒரு விழாவில் சீப் கெஸ்ட்டாக சென்றிருந்தார் திவ்யா. அந்த விழாவில் எனக்கு என் அப்பா தான் ஹீரோ, என கூறியிலிருந்தார்.

மேலும், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார் திவ்யா. இந்த ஷார்ட் பிலிமில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பேட்மிண்டன் வீராங்கனை சாயினா நேவால் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Advertisement