மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு சிவர்கார்த்திகேயன் செய்துள்ள உதவி.

0
4954
sk
- Advertisement -

மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

மேலும் வடிவேல் பாலாஜி ஆரம்பத்தில் கவனிக்கப்பட்டது என்னவோ சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு பகுதி மூலம் தான். இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன், வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளதாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இயக்குனர் தாம்சன் கூறியிருக்கிறார். வடிவேலு பாலாஜியின் மறைவு குறித்து சிவகார்த்திகேயன் மிகவும் வரப்பட்டதாகவும் வடிவேலு பாலாஜியின் மகன் மற்றும் மகளின் படிப்பு செலவை தான் ஏற்பதாகவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளதாக தாம்சன் கூறியிருக்கிறார்.

மேலும் வடிவேலு பாலாஜியின் மறைவு குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், பாலாஜியை எனக்கு அது இது எது நிகழ்ச்சியில் இருந்தே தெரியும். எங்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று அனைவரும் கூறுவார்கள். அவருடன் வேலை பார்த்த போது மிகவும் கலகலப்பாக இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால் இயக்குனர் எங்களுக்கு ஒரு ஒன்லைன் மட்டும்தான் கொடுப்பார். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து அதனை ஸ்க்ரிப்ட்டாக மாற்றி விடுவோம். அவரை எந்த மேடையில் விட்டாலும் மக்களை சிரிக்க வைத்து விடுவார். சமீபத்தில் தான் அவரை ஒரு திருமணத்தில் சந்தித்தேன் அவருடைய சிரிப்பை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

-விளம்பரம்-
Advertisement