சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருந்தார்.தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி அவர்கள் சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே நடிகர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நவீன் பற்றிய தகவல்:
இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது.மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. பின் நடிகர் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.
நவீன் – கண்மணி திருமணம் :
ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது. அனைவரும் எதிர்பார்த்திருந்த கண்மணி- நவீன் திருமணம் ஜூன் மாதம் நடந்து முடிந்தது.இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
கண்மணி கர்ப்பம் :
இப்படி ஒரு நிலையில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில் நவீன் – கண்மணி இருவரும் காஃபி ஷாப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தனர். அதில் கண்மணியின் வயிறு சற்று பெரிதாக இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர் கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இப்படி ஒரு நிலையில் நவீன் – கண்மணி’ யூடியூப் தளத்தில் இது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள்.
நவீன் கண்மணி வெளியிட்ட வீடியோ :
அதில், ` நாங்க இதை சர்ப்ரைஸ் ஆக வச்சிருக்கணும்னு தான் நினைச்சிருந்தோம்… மண்டையில உள்ள கொண்டையை மறந்துட்டீயேடாங்குற மாதிரி சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும்போது நாங்க இதை கொஞ்சமும் கவனிக்கல. அதனால, பலரும் எங்ககிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டீங்க’ அதனால தான் சரி நம்ம ஃபேமிலிகிட்ட இதை சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. கடவுள் கொடுக்குறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும்!’ எனக் கூறியிருக்கின்றனர்.