தமிழில் ஒரு சில குணசித்ர நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஸ்ரீமன்.
ஆந்திர மாநிலம், ராஜ்மந்த்ரியை பூர்விகமாக கொண்ட இவர் , 1975 ஆம் ஆண்டு முதல் திரை துறையில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்துளளார். அதிலும் குறிப்பாக விக்ரம் நடித்த “சேது” கமல் நடித்த “பஞ்ச தந்திரம்” போன்ற படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
பொதுவாக படங்களில் இவரை குண்டான தோற்றத்திலேயே தான் நாம் பார்த்துள்ளோம். ஆனால், சமீப காலமாக நடிகர் ஸ்ரீமன் உடற் பயிற்சிகளை செய்து தனது உடல் எடையை கிட்டத்தட்ட 14 கிலோ குறைத்துள்ளாராம். சமீபத்தில் நடிகர் ஸ்ரீமன் உடற் பயிற்ச்சி செய்துவிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை கண்டா ரசிகர்கள் எதாவது படத்தில் கதாநாயகனாக நடிக்க போகிறாரோ என்று நினைத்து வருகின்றனர். தற்போது அஜித் நடித்து வரும் “விசுவாசம்”, லாரென்ஸ் நடித்து வரும் “காஞ்சனா 3” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது