சிவகுமார் செல்ஃபி முதல் கஜா புயல் வரை…!மீம் கிரியேட்டர்களை வெளுத்து வாங்கிய நடிகர் சூர்யா..!

0
1208
Surya
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி விரைவாகவும் எளிதாகவும் பரவுவதற்கு முக்கிய பங்குவகிப்பது மீம் தான். ஒரு சில மீம்கள் ரசிக்கும்படி இருந்தாலும் ஒரு சில மீம்கள் நம்மை சங்கடபட வைத்துவிடுகிறது.

-விளம்பரம்-

Sivakumarcellphone

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சிவகுமார் செல்பி எடுக்கவந்த இளைஞரின் போனை தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர்கள் என்றே சொல்லலாம். அதே போல கஜா புயல் வந்த போதும் அதனை கலாய்த்து பல மீம்களும் வெளியாகியது. இந்நிலையில் சமூக வலைதளத்தின் நிலை குறித்து நடிகர் சூர்யா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். – இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

-விளம்பரம்-

kaja

மிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.ஒரு வானிலை அறிவிப்பு வந்தால், உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல வருகிற சாதாரண மீம்களில்கூட நகைச்சுவை அல்ல; கூடவே நம்முடைய அலட்சியத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம். ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர்.அத்தகைய இயற்கைச் சீற்றத்தை விடுமுறை தினமாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது.

கப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும், கவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட.ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, தன்படம் எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார். அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது.

அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம் என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்? ‘விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா?

பொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால், நாமெல்லாம் யார்? நகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட வார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு ‘வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது.

Advertisement